உங்கள் வாழ்நாளில் நீங்கள் செய்யும் மிகப்பெரிய முதலீடுகளில் உங்கள் வீடு முக்கிய பங்கு வகுக்கிறது. உங்கள் வீட்டின் கூரை அதன் அடித்தளத்தைப் போலவே முக்கியமானது. அதனால்தான், அதை சிறந்த முறையில் பாதுகாக்கக்கூடிய கூரை அமைப்புடன் மேம்படுத்துவது அவசியம் ஆகும்.
சுருங்க கூறினால், உங்கள் வீட்டின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடு பெரும்பாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கூரைப் பொருளைப் பொறுத்தது .
சிறந்த கூரை தேர்வு செய்யும் முன் கணக்கில் கொள்ள வேண்டிய காரணிகள்
பரந்த அளவிலான கூரை வகைகள இன்று சந்தையில் இருப்பதால், சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது சவாலாக இருக்கலாம். எனவே ஒரு கூரை பொருள் தேர்ந்தெடுக்கும் போது மிக முக்கியமான சில காரணிகளை கருத்தில் கொள்ளுதல் அவசியம்.
கீழே நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய காரணிகள் மற்றும் அதன் சிறப்பையும் காண்க.
கூரையின் எடை
கூரையின் எடையைக் கவனிப்பது முக்கியம். கனமான பொருட்கள் வீட்டின் கட்டமைப்பு பாதிக்கலாம். அதற்குப் பதிலாக, உங்கள் கட்டிடத்தின் கட்டமைப்பு உறுதித்தன்மையை நிறைவு செய்யும் பொருட்களைத் தேர்வுசெய்யவும். ஒரு கட்டிடம் வயதாகும்போது, அது அதன் வலிமையை இழக்கத் தொடங்குகிறது. எனவே மிதமான கணமுடைய மற்றும் உறுதியான கூரையை தேர்வு செய்யுங்கள்.
மேலும் உங்கள் வீட்டின் அடித்தளம் பலவீனமாக இருந்தால், இலகுரக கூரை பொருட்கள் சிறந்தவை. உங்கள் கட்டிடத்திற்கு ஏற்ற எடை கொண்ட கூரைப் பொருளைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வீடு நீண்ட காலம் நீடிக்கும்.
வண்ண கூரை தாள்களின் வகைகள்
வீட்டு உரிமையாளராக, உங்கள் விருப்பங்களை நீங்கள் குறைக்க வேண்டியதில்லை. பல்வேறு வண்ணங்கள் மற்றும் பூச்சு கூரை தாள்களை பயன்படுத்துதல் முக்கியமானது. உங்கள் கூரையானது வீட்டின் செயல்பாட்டுத் தேவைகளையும் அதன் ஒட்டுமொத்த அழகியலையும் பூர்த்தி செய்கிறது.
கூரை ஆயுட்காலம்
மக்கள் நீண்ட காலத்திற்கு மகிழ்ச்சியாக வாழ வீடுகளை வாங்குகிறார்கள். ஒரு நீடித்த கூரைப் பொருளில் முதலீடு செய்வதன் மூலம், கூரையைப் புதுப்பிப்பதற்கான தேவையைத் தடுக்கிறது மற்றும் உங்கள் பணத்தை மிச்சப்படுத்துகிறது.
மேலும் நீடித்த கூரை பொருட்கள் உங்கள் சொத்தின் மதிப்பை தக்கவைக்க உதவும் . எனவே நீண்ட ஆயுளுக்கு நன்கு மதிப்பிடப்பட்ட கூரை பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும்.
நிறுவ எளிதான கூரைகள்
ஒரு கூரை பொருள் நிறுவல் வசதி உங்கள் வீட்டிற்கான சிறந்த வகையை தேர்வு செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. சில கூரை பொருட்கள் நிறுவுவதற்கு சிக்கலானவை என்றாலும், மற்றவை எளிதானவை. எனவே, எளிதாக நிறுவக்கூடிய கட்டுமானப் பொருட்களை வாங்குவது சிறந்தது ஆகும்.. ஏனென்றால், அவை மலிவானவை, பழுதுபார்க்க எளிதானதவை.
கூரையின் மறுசுழற்சி தன்மை
மறுசுழற்சி பொருட்களால் செய்யப்பட்ட சிங்கிள்ஸை (Shingles) போன்ற கூரை வகையை வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டில் பெருத்த விரும்புகின்றனர். பெரும்பாலும், நிலக்கீல், உலோகம் மற்றும் வேறு சில பொருட்கள் குறைந்த பட்சம் மறுசுழற்சி செய்யக்கூடியவை,
கார்பன் தடத்தை குறைப்பதில் நம்மில் பலருக்கு அக்கறை உள்ளது, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, மறுசுழற்சி செய்யக்கூடிய கூரை பொருளைத் தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும். எந்த பிராண்டுகள் மற்றும் பொருட்கள் பூமிக்கு சிறந்தது என்பதை அறிய சிறந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெறுங்கள்.
கூரையின் வானிலை சகிப்புத்தன்மை
குறைபாடற்ற நிறுவல் மற்றும் சரியான பராமரிப்பு மூலம் முடிந்தவரை ஒரு கூரையின் ஆயுளை அதிகரிக்க முடியும். ஆனால் உற்பத்தியில் எதிர்பார்க்கப்படும் பொருளின் குணங்களின் தொகுப்பு அதன் வானிலை எதிர்ப்பை வரையறுக்கிறது. எனவே ஒவ்வொரு கூரை வகைகளின் தனிமங்கள் உங்கள் வசிப்பிடத்தில் உள்ள காலநிலைக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைக் கண்டறியவும்.
திடம் மற்றும் தரம் நிறைந்த டாட்டா ப்ளூஸ்கோப் ஸ்டீஸ் (Tata Bluescope Steel)
டாட்டா ப்ளூஸ்கோப் ஸ்டீல் (Tata Bluescope steel) உலோக கூரை மற்றும் பிற கட்டிட வடிவமைப்பு சார்ந்த அனைத்து வகையான பொருட்களின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. எங்கள் அடையாளம் ட்யூராஷைன் (Durashine) உங்கள் வீடு அல்லது வணிக வளாகத்தை நிறுவ தேவையான உயர் தரமான கூரை மற்றும் சுவர் தாள்களை உற்பத்தி செய்வித்து தருகிறது.
எங்கள் தயாரிப்பு அனைத்தும் வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் நிறுவனம் இந்தியாவின் முதன்மையான வண்ணம் பூசிய கூரை தாள்கள் பிரிவில் சர்வதேச ப்ராண்ட் ஆலோசனை நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.