வாழ்க்கையில் மற்ற அம்சங்களை போல, உங்கள் வீடு உங்களை வசதியாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதை உறுதிசெய்ய அதற்கு பராமரிப்பு தேவைப்படும்.
உதாரணமாக உங்கள் சுவர்களின் நிறம் மங்கத் தொடங்கும்போது, அவற்றை மீண்டும் பூச வேண்டியது அவசியம் ஆகும். இது போலவே ஒரு உறுதியான உலோக கூரையானது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் வைத்திருக்கிறது. எனவே, உங்கள் வீட்டுக் கூரையின் நிலையை பாதுகாத்து நல்ல நிலையில் வைத்திருப்பது இன்றியமையாதது ஆகும்.
கூரை மாற்று சேவைகள் சுட்டும் 7 அறிகுறிகள்
வீட்டின் மிக முக்கியமான பாகங்களில் கூரையும் ஒன்றாகும். எனவே, அதனுடன் சிக்கல்களைக உடனுக்குடன் கண்டறிவது மிகவும் முக்கியமானது. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் கூரையில் உள்ள சிறிய சிக்கல்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டால் அவை மிகவும் தீவிரமான பிரச்சனைகலை உண்டாக்கலாம்.
ஆனால் உங்கள் கூரையை மாற்ற உகந்த நேரம் என்பதை எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்? உங்கள் கூரையை மாற்ற வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகளை கீழே விளக்கங்கள் உடன் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன
நீர் கசிதல்
உங்கள் வீட்டிற்குள் நீர் கறை படிந்திருப்பதை நீங்கள் கண்டால் உங்களுக்கு கூரை மாற்று சேவைகள் தேவை என்று அர்த்தம்.
உங்கள் வீட்டில் நீர் கசிவு ஏற்பட்டிருக்கலாம். கசிவை உடனடியாக சரிசெய்யவில்லை என்றால், அது உங்கள் குடும்பத்தின் சுவாச ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இது தோல் வெடிப்பு, தலைவலி, கண் எரிச்சல், இருமல் மற்றும் பிற ஒவ்வாமை போன்ற உடல்நல குறைபாடுகளை ஏற்படுத்தும்.
கூரையின் அகவை
நீங்கள் வசிக்கும் இருப்பிடத்தின் வானிலை மற்றும் கூரை பொருட்களைப் பொறுத்து ஒரு கூரை சுமார் 25 – 30 ஆண்டுகள் நீடிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கூரை எவ்வளவு காலத்திற்கு முன்பு மாற்றப்பட்டது என்பதைப் பார்க்க உங்கள் வீட்டு மேம்பாட்டுப் பதிவுகளை மதிப்பாய்வு செய்யவும். ஸ்லேட், செம்பு மற்றும் ஓடு கூரைகள் நீண்ட காலம் நீடிக்கும்.
இருப்பினும், ஒரு கூரை 20 ஐ எட்டியவுடன், அதன் தரம் மற்றும் செயல்திறன் தோல்வியடையும் முன் கூரையை மாற்றுவது நல்லது. அவசரகால மாற்றத்தின் செலவு மற்றும் தொந்தரவுகளைத் தவிர்க்க இது உங்களுக்கு உதவும்.
சேதமடைந்த அல்லது விடுபட்ட சிங்கிள்ஸ் (Shingles)
உங்கள் கூரையில் கவனிக்க வேண்டிய மற்றொரு எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்று உங்கள் சிங்கிள்ஸுடன் (shingles) தொடர்புடையது. உங்கள் சிங்கிள்ஸ் விடுப்பட்டிருந்ததால் அல்லது சுருண்டிருந்தால் அல்லது குறிப்பிடத்தக்க நீர் சேதத்தின் அறிகுறிகளைக் காட்டினால், அது புது கூரைத் திட்டத்திற்கான நேரமாக இருக்கலாம்.
கூரையில் தேய்வு
தளர்வான கூரை உங்கள் வீட்டின் ஒட்டுமொத்த தோற்றத்தை அழிப்பதோடு மட்டுமல்லாமல், மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் தொய்வு ஏற்படுவதற்கான காரணத்தை நீங்கள் கண்டறிந்து செப்பனிட மறந்தால் உங்கள் முழு கூரையும் இடிந்து விழ வாய்ப்பு உள்ளது.
தரமற்ற பொருள் மற்றும் பெருங்காற்று ஆகியவை கூரை தொய்வதற்கான பொதுவான காரணங்கள். பொதுவாக, தொய்வு அதிகமாக இருந்தால் முழு கூரையையும் மாற்ற வேண்டும். எனவே, ஈரப்பதம் சேதம் மற்றும் அழுகியதற்கான அறிகுறிகளை சரிபார்க்கவும்.
தேய்ந்த கூரையின் வண்ணங்கள்
பெரும்பாலான உலோக கூரைகள் நீர்ப்புகா பூச்சுடன் உருவாக்கப்படுகின்றன, இது மழை மற்றும் ஈரப்பதத்திலிருந்து ஓர் பாதுகாப்பு வடிவமாக செயல்படுகிறது. ஆனால், அதன் வண்ணம் தேயும் போது இடிந்து விழுந்து சேதமடைய வாய்ப்பு உள்ளது. இது வெப்பநிலை ஏற்ற இறக்கங்களிலிருந்து சிதைந்து தேய்ந்து போகலாம். உங்கள் உலோக கூரையில் வண்ணப்பூச்சு மங்கி அல்லது மெல்லியதாக இருந்தால், அது துருப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. சேதம் விரிவானதாக இருந்தால், உங்கள் கூரை மாற்றுவது எளிதாகவும் விலை குறைவாகவும் இருக்கும.
துருப்பிடித்த கூரை
முன்பு கூறியது போல், உலோக கூரையானது துருப்பிடிப்பதைத் தடுக்கவும் அதை பாதுகாக்கும் வண்ணப்பூச்சுடன் சீல் வைக்கப்படுகிறது. இருப்பினும், இதை சரியாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ துருப்பிடிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.
உங்கள் கூரைப் பொருட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வகையான உலோகங்கள் இருந்தால் , அதாவது வேறுபட்ட உலோகங்களுக்கிடையேயான தொடர்பு (தாமிரம் அல்லது அலுமினியம் போன்றவை) ஒரு இரசாயன எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும். இது கசிவுகள் காரணமாக உங்கள் கூரையின் கீழ் நீர் சேதத்தை ஏற்படுத்தும்.
உங்கள் கூரையில் துருப்பிடித்திருப்பதை நீங்கள் கண்டால், நிபுணர்களைத் தொடர்புகொள்வது நல்லது.
புயல் பாதித்த கூரைகள்/strong>
பல வெப்பமண்டல பகுதிகளில் புயல் சேதம் பொதுவானது. உங்கள் உலோகக் கூரையின் மீது ஏதேனும் விழுந்தாலோ அல்லது தாக்கினாலோ, அது உங்கள் வீட்டின் முழு கட்டமைப்பை சேதப்படுத்தும். இது வெளிப்படையாகத் தோன்றலாம், ஆனால் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்களுக்கு சிறிய சம்பவங்கள் கூட கூரை மாற்றத்திற்கு வழிவகுக்கும் அதனால்தான் பலத்த காற்று மற்றும் மழையை நீங்கள் எதிர்கொண்டால் உங்கள் கூரையை சரிபார்க்க வேண்டும். உங்கள் உலோக கூரையில் ஏதேனும் கீறல்கள் இருப்பதைக் கண்டால், அதை மாற்ற வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
டாட்டா கூரை தாள்கள் – உயர்தரத்தின் அடையாளம்
உங்கள் கூரை என்பது உங்கள் வீட்டிற்கு ஒரு அழகு சாதனம் மட்டுமல்ல; இது காற்று, மழைநீர், ஆலங்கட்டி புயல்கள், பனி புயல்கள் போன்ற அபாய நிகழ்வுகள் இருந்து உங்களை பாதுகாக்கிறது. ஆகவே நீங்கள் ஒரு தரமான மற்றும் பிரபலமான உலக கூரை தாள்களை வாங்க, டாட்டா ப்ளூஸ்கோப் ஸ்டீல் (Tata Bluescope Steel) உற்பத்தியாளர்களை தேர்வு செய்யுங்கள். எங்கள் பொருட்கள் சர்வதேச சந்தையில் வலிமை மற்றும் ஆயுட்காலத்திற்கும் பெயர் பெற்றது ஆகும். உங்கள் எத்தகைய தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்கள் நிபுணர்களை இன்றே தொடர்பு கொள்ளவும்.